முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பிரதேசத்தில் உள்ள நடிகர் சைப் அலிகானின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துகள் அரசுடைமையாக்கம்?

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      சினிமா
saiif-ali-khan-----

Source: provided

மும்பை : மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பாலிவுட் நடிகர்  சைப் அலிகான் குடும்பத்தின் ரூ. 15,000 கோடி மதிப்பிலான பூர்விகச் சொத்துகள் அரசுடமையாக்கப்படும் சூழல் நிலவுகிறது.

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகானின் மகன் பாலிவுட் நடிகர் சைப் அலிகான். மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த நவாப்பான பட்டோடி ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த குடும்பத்துக்கு போபாலில் அரண்மனை, நிலங்கள், கட்டடங்கள் என ரூ. 15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. நடிகர் சைப் அலிகான் சிறுவயதில் போபால் அரண்மனையில் தான் வளர்ந்தார்.

1950 ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது, பட்டோடி வாரிசாக கருதப்பட்ட அபிதா சுல்தான் தனது மகனுடன் பாகிஸ்தான் சென்றுவிட்டார். இதனால், இந்திய குடியுரிமையையும் இழந்தார். இதையடுத்து, அவரது சகோதரி சஜிதா சுல்தான் வாரிசாக கருதப்பட்டார். சுஜிதாவின் மகன் மன்சூர் அலிகான். இந்த நிலையில், பட்டோடி குடும்பத்துக்கு சொந்தமான அனைத்து சொத்துகளும் எதிரி சொத்துகள் என அறிவித்து 2014 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. எதிரி சொத்துகள் என அறிவித்தால், அது மத்திய அரசுக்கு சொந்தமாகிவிடும்.

மத்திய அரசின் நோட்டீஸை எதிர்த்து 2015ஆம் ஆண்டில், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நடிகர் சைப் அலிகான் வழக்கு தொடர்ந்தார்.  இதனிடையே, 2016 ஆம் ஆண்டு நவாப் சொத்துகளுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று புதிய நோட்டீஸை மத்திய அரசு வெளியிட்டது.  தொடர்ந்து, கடந்தாண்டு டிசம்பர் 13 ஆம் தேதி சைப் அலிகானின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், சைப் அலிகானின் சொத்துகளை அரசுடமையாக்குவதற்கான தடையும் நீங்கியது. மேலும், 30 நாள்களுக்குள் சைப் அலிகான் மேல்முறையீடு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நீதிமன்றம் வழங்கிய 30 நாள்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை சைப் அலிகான் தரப்பில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால், எந்நேரமும் சைப் அலிகானின் குடும்ப சொத்துகளை போபால் மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தும் சூழல் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து