முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த சென்னை போட்டிக்கான டிக்கெட்கள்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      விளையாட்டு
CSK team 2024-03-27

Source: provided

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற மார்ச் 28-ல் நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று காலை 10.15 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.chennaisuperkings.com என்ற வலைதளத்தில் தொடங்கியது.

38,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்துக்கான டிக்கெட் வரிசை 3.7 லட்சத்துக்கும் அதிகமாக காணப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டபோதும் லட்சக்கணக்கானோர் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.

அதுமட்டுமின்றி, அதிகாரப்பூர்வ டிக்கெட் தொகை ரூ. 1,700 முதல் ரூ. 7,500 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், பல்வேறு சட்டத்துக்கு புறம்பான தளங்களிலும் கள்ளச் சந்தையிலும் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக ரசிகர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து