முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரகப்பகுதியில் ரூ.61 கோடியில் 500 முழுநேர ரேசன் கடைகள் : அமைச்சர் பெரியசாமி தகவல்

புதன்கிழமை, 26 மார்ச் 2025      தமிழகம்
Periyasamy 2023-09-02

Source: provided

சென்னை : ஊரகப்பகுதியில் ரூ.61 கோடி மதிப்பீட்டில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி சட்டப் பேரவையில் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 20 புதிய அறிவிப்புகளை அமைச்சர் இ. பெரியசாமி வெளியிட்டார். அதில் முக்கியமாக, ஊரகப்பகுதிகளில், மக்கள் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை எளிதில் பெறும் பொருட்டு, 500 முழுநேர நியாய விலைக்கடைகள் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, வன உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அந்த ஊராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்திட ஏதுவாக, தற்போது வழங்கப்படும் மாநில நிதிக்குழு பகிர்மான நிதியுடன் சிறப்பு நிதியாக ரூ. 10 கோடி மானியமாக வழங்கப்படும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள பள்ளிகள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மகளிர் சுய உதவிக்குழு கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், நூலகக் கட்டடங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பல்வேறு அலுவலக மற்றும் பொது பயன்பாட்டுக் கட்டடங்களை புனரமைத்து முறையாகப் பராமரிப்பதற்காக, விரிவான பராமரிப்புக் கொள்கை  வகுக்கப்படும். 2025-26 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இதற்கென மாநில மானியத்திலிருந்து ரூ. 100 கோடி நிதிக்குழு ஒதுக்கீடு செய்யப்படும் உள்ளிட்ட 20 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து