முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

புதன்கிழமை, 26 மார்ச் 2025      வர்த்தகம்
gold 2024-01-04

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,560-க்கு விற்பனையானது.

சென்னையில் தங்கம் விலை கடந்த மாா்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், மாா்ச் 21 ஆம் தேதி பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 66,160-க்கும், மாா்ச் 22 ஆம் தேதி மீண்டும் பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 65,840-க்கும், மாா்ச் 23-இல் விலை மாற்றமின்றியும் விற்பனையானது. தொடா்ந்து திங்கள்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 65,720-க்கும் விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ. 8,185-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 65,480-க்கும் விற்பனையானது. கடந்த 5 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,000 குறைந்தது. 

இந்த நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,195-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,560-க்கு விற்பனையானது. வெள்ளி விலை நிலவரம் தொடா்ந்து 3 நாள்களாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ. 110-க்கு விற்பனையாகி வந்த வெள்ளி விலையில் புதன்கிழமை மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.109.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,09,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து