முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதன்கிழமை, 26 மார்ச் 2025      தமிழகம்
CM 2024-12-16

Source: provided

சென்னை : சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்,

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த தமிழ்ச்செல்வன் (வயது 57) என்பவர் 13.3.2025 அன்று பணியின் நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் மாவட்ட காவல் அலுவலகம் எதிரில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நான்குசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 24.3.2025 அன்று மாலை உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழ்ச்செல்வன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து