தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புளூடூத், ஜிபிஎஸ் 360 டிகிரி பார்வை கோணம் கொண்ட நவீன ஹெல்மெட்

க்ராஸ்ஹெல்மெட் என்பது அடுத்ததலைமுறை மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் ஆகும், இது ஒலி கட்டுப்பாடு, ஜிபிஎஸ், 360˚ காட்சித்திறன் என நமது சவாரி அனுபவத்தையே முற்றிலுமாக மாற்றிவிடும். இதுவே  முதல் ஒலி கட்டுப்பாட்டு செயல்பாடு, ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஒரு பிரத்யேக ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கொண்டு கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன ஹெல்மெட் ஆகும்.  பின்புறம் வரும் வாகனங்களின் காட்சி உங்கள் ஹெல்மெட்டின் முன்பகுதியில் உள்ள திரையில் தெரியும் என்பதால் திரும்பி பார்க்க வேண்டிய தேவை இருக்காது. இது மட்டுமின்றி , இந்த கிராஸ் ஹெல்மெட் ஜீபிஎஸ் வசதி உள்ளதால் நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு சரியான பாதையை காண்பிக்கும். 360 கோணம் பார்க்க முடியும் என்பதால் நீங்கள் சாதாரணமாக பார்க்க முடியாத சாலையின் பகுதியை கூட இதன் மூலம் பார்க்க இயலும் என்பது கூடுதல் வசதி.

நுங்கின் பயன்

நுங்கு சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து அதிகம் கிடைக்கிறது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளது. மேலும், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.

வந்திருச்சு இ-டாட்டூ

ஆய்வாளர்கள் புதிய வகை எலெக்ட்ரானிக் டாட்டூக்களை, உருவாக்கியுள்ளனர். ஸ்கின் மார்க்ஸ் என்று பெயரிட்டுள்ள இந்த இ-டாட்டூவினை தோலில் ஒட்டிக் கொள்ளலாம். தலைமுடியை விட மெல்லியதாக வடிவமைக்கப்பட்ட இந்த இ-டாட்டூவினை ஸ்மார்ட்போனில் இணைத்து இயக்கங்களை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வந்திருச்சு புதுசு

எவர்லாஸ்ட் நோட்புக் மூலம் எழுதுவதை டிஜிட்டலாக சேமிக்க வசதி வந்தாச்சு. இந்த நோட்புக்கில், எழுதலாம், பதிவு செய்து வைக்கலாம். கூடுதலாக, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றிலும் பகிரலாம். க்ளவுட் முறையில் கூகுள் ட்ரைவ் உள்ளிட்டவற்றில் கோப்புகளை சேமிக்கவும் வசதியுண்டு.

பொழிவுக்கு பூண்டு

ஒரு பல் பூண்டை மசித்து எடுத்து பின், அத்துடன் ஒரு டீ ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் க்ளே பவுடர் சேர்த்து செய்த பேஸ்டை முகத்தை நன்கு சுத்தம் செய்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ சுருக்கம் மறைந்து முகம் இளமையாக காட்சியளிக்கும்.

நாசா திட்டம்

பூமியின் வளிமண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜன், 21 சதவீதம் ஆக்சிஜன் மற்றும் குறைந்த அளவில் கார் பன்டை ஆக்சைடு உள்ளிட்டவைகள் உள்ளன. ஆனால் செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் 0.13 சதவீதம் மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. அதே நேரத்தில் 95 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு உள்ளது. எனவே உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க ‘நாசா’ திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு பாசி இனங்கள் அல்லது பாக்டீரியாவை அனுப்ப முடிவு செய்துள்ளது. 2020-ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக ஒரு விண்கலம் அனுப்பும் போது. அத்துடன் பாக்டீரியா அல்லது பாசி இனங்கள் அனுப்பப்படுகின்றன. அங்கு இவை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago