முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தொலைநோக்கியை கண்டுபிடித்தவர்

1609 ஆம் வருடம் ஹாலந்து நாட்டில் 'ஹான்ஸ் லிப்பர்ஷி' என்பவர் ஒரு மூக்கு கண்ணாடி கடை வைத்திருந்தார். அவரிடம் ஒரு சிறுவன் வேலை செய்து கொண்டு இருந்தான். ஒரு நாள் அவனுக்கு பொழுது போகவில்லை. எனவே அவன் மூக்கு கண்ணாடிக்கு பயன்படும் ஒவ்வொரு லென்சாக எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தான். திடீரென்று குழி ஆடியை கண்ணுக்கு அருகிலும், குவி ஆடியை  சிறிது தொலைவிலும் பிடித்து கொண்டான். தூரத்தில் உள்ள சர்ச் கோபுரத்தை அந்த இரு கண்ணாடிகள் வழியாக பார்த்தான். அவன் கோபுரத்தை லென்ஸ் வழியாக பார்த்தவுடன் ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அந்த கோபுரம் அவனுக்கு மிக அருகில் இருப்பது போல தெரிந்தது. இதை தனது முதலாளியான ஹான்ஸ் லிப்பர்ஷி வந்தவுடன் கூறினான். அவர் அதை ஒரு தகரக் குழாயில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கலிலியோ அங்கு வருகிறார். இந்த விவகாரம் விஞ்ஞானியான கலிலியோவுக்கு தெரிய வந்தது. உடனே கலிலியோ இது குறித்து தெரிந்து கொண்டு இரண்டு லென்ஸ்களை பயன்படுத்தி கருவி ஒன்றை உருவாக்கினார். பின்னர் அதை சற்று மேம்படுத்தி, கொஞ்சம் வித்தியாசமாக, லென்ஸ்கள் முன்னும் பின்னும் நகரும் மாதிரியான குழாயில் அடைத்தார். அதற்கு "டெலஸ்கோப்" எனப் பெயரிட்டார். அதன் பிறகு வானியல் சரித்திரமே தலைகீழாக மாறிவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த கதை.

குழந்தைகளை கண்டறிய

கடந்த ஜனவரி 2012 மற்றும் மார்ச் 2017 இடையே 2.5 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. காணாமல் போன குழந்தைகளை கண்டறிய சென்னையை இரு இளைஞர்கள் மொபைல் ஆப் ஒன்றை கண்டறிந்துள்ளார். முகங்களை அடையாளம் காணும் மென்பொருள் உதவியுடன் 'ஃபேஸ்டேக்ர்' எனும் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். இதில்  காணாமல் போன குழந்தையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், அந்த குழந்தையின் புகைப்படத்துடன் ஒத்துப்போகும் குழந்தைகளின் புகைப்படங்கள் தோன்றும். அதன் மூலம் அந்த குழந்தை இருக்கும் இடத்தை அறிய முடியுமாம். இதுதான் இதன் சிறபம்சம். இந்த ஆப் மூலம் இதுவரை 100க்கும் மேற்பட்ட காணாமல் போன குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில்....

பூமியை போன்று விவசாயம் செய்வதற்கு ஏற்ற தகவமைப்புகள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கூறும் நாசா விஞ்ஞானிகள் அங்கு விவசாயம் செய்வதன் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர். பசுமைகுடில் தொழில்நுட்பம் மூலம் விண்வெளி வீரர்கள் தங்கிருக்கும் அறைகளில் விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தேபெஸ் என்ற பழங்கால நகரம் எங்குள்ளது

தேபெஸ் என்ற கிரேக்க பெயருடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்படி பெயருள்ள ஒரு பழங்கால நகரம் எகிப்தில் காணப்பட்டது. அதில் கிமு 3200 முதல் மக்கள் வசித்து வந்தனர். உலகிலேயே மக்கள் வசித்து வந்த பழமையான நகரங்களில் இதுதான் முதன்மையானது என்கின்றனர். தற்போது இந்த நகரம் லக்சார் என அறியப்படுகிறது.இங்குள்ள கர்நாக் என்ற பழமையான கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில் இன்றும் வரலாற்று சின்னங்கள் உள்ளன. பண்டைய காலத்தில் எகிப்தியர்களின் வாடிகனை போல தேபெஸ் விளங்கியது என்றால் ஆச்சரியம் தானே...

தண்டவாளத்தில் சரளைக்கற்கள் போடப்படுவது ஏன் தெரியுமா?

அதிக எடை கொண்ட ரயிலைத் தண்டவாளங்கள் தாங்குகின்றன. அவற்றை, அடிக்கட்டைகள் தாங்குகின்றன. முன்பெல்லாம் மரத்தால் ஆன அடிக்கட்டைகள் பயன்படுத்தப் பட்டன. தற்போது கான்கிரீட்டால் செய்யப்பட்ட அடிக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. தண்டவாளத்தின் மேல் ரயில் செல்லும்போது நிலைப்புத்தன்மையை உண்டாக்குவதற்காக, சரளைக் கற்களை நிரப்பி வைக்கிறார்கள். உருண்டையான அல்லது வழவழப்பான கற்கள் என்றால், ரயிலின் வேகத்தால் ஏற்படும் அதிர்வில் உருண்டு ஓடிவிடும். மாறாக கூர்மையான விளிம்புகளுடைய சரளைக் கற்கள், ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பிணைத்துக்கொள்கின்றன. இதனால் நிலைப்புத்தன்மை நன்றாகக் கிடைக்கிறது. ரயில் செல்லும்போது சரளைக் கற்களும் உருண்டு ஓடுவதில்லை. சரளைக் கற்களுக்கு மேல் சற்று உயரமாகத் தண்டவாளம் அமைக்கப்படுவதால், மண் மூடும் வாய்ப்பும் இல்லை. மழையால் தண்ணீரும் தேங்குவதில்லை. செடி, கொடிகளும் முளைப்பதில்லை. அதனால்தான் தண்டவாளத்தில் சரளைக் கற்களைப் போடப்படுகின்றன.

பேஸ் புக்கை திறந்தால் கன்னத்தில் பளார்

இந்திய அமெரிக்கரான மணீர் சேதி. இவர் பாவ்லோக் நிறுவனத்தில் நிறுவனர் மற்றும் சிஇஓவாக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும் என புரிந்து கொண்டார். இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவர் விநோதமான முயற்சி ஒன்றையும் உருவாக்கினார். அதில் பணியின் போது பேஸ்புக் பார்ப்பதால் பணி திறன் பாதிப்பதாக கருதிய அவர்,தான் பேஸ் புக் பக்கத்தை பார்க்கும் போதெல்லாம் தன்னை அறைவதெற்கென பெண் ஊழியரை பணியமர்த்தினார். இவர் தன்னை அறியாமல் பேஸ் புக்கை திறக்கும் போதெல்லாம் அந்த பெண் இவரை கன்னத்தில் அறைவதுதான் அந்த பெண்ணின் பணி. கரா என்ற அந்த பெண்ணுக்கு இதற்காக மணிக்கு 8 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.600)  என்ற சம்பளமாக வழங்கப்பட்டது. இதனால் ஒரு ஆச்சரியப்படத்தக்க மாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறினார். ஆம் அவரது உற்பத்தி திறன் ஜெட்வேகத்தில் 98 சதவீதம் அதிகரித்துள்ளது.  இதில் அவரை அந்த பெண் கன்னத்தில் அறையும்  புகைப்படத்தையும் சேதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதை பிரபல டெஸ்லா கார் நிறுவன அதிபர் Elon Musk தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததுடன் மனீஷ் சேதியின் இந்த யோசனைக்கு பாராட்டும் தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago