முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அதிசய சிறுமி

சீனாவின் சுன்யி நகரில் வசிக்கிறாள், தந்தையால் கைவிடப்பட்ட வாங் அண்ணா என்ற 5 வயது சிறுமி. தனது பாட்டி, கொள்ளு பாட்டியுடன் வசித்து வரும் இவள்,  அவர்களுக்கு சமைப்பது, ஊட்டிவிடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகளை செய்வது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

பறக்கும் டாக்சியை பரிசோதித்த தென் கொரியா

கார்கள் தரையில் சீறிப் பாய்ந்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. மாறாக அவை விரைவில் வானில் பறக்க தயாராகி வருகின்றன. இதற்கான பல்வேறு முன்னோட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வந்த போதிலும் இதில் தென் கொரியாதான் முன் கை எடுத்துள்ளது. வெகு விரைவில் தனது நாட்டில் பறக்கும் டாக்ஸிகலை பயன்படுத்தப் போவதாக கடந்த 2020 இல் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது பறக்கும் கார் டாக்ஸியை வெற்றிகரமாக அந்நாடு பரிசோதித்துள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு Gyeonggi Province இல் உள்ள ஜிம்போ நகரில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பறக்கும் டாக்ஸியை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. ஜெர்மனி நிறுவனமான Volocopter இதற்கான பறக்கும் டாக்ஸியை வடிவமைத்து தந்துள்ளது. ஜிம்போவிலிருந்து தலைநகர் சியோல் வரை சுமார் 30 முதல் 50 கிமீ வரை இந்த பறக்கும் டாக்ஸி சேவையை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 2025க்குள் உறுதியாக இது தொடங்கப்பட்டு விடும் என்கிறது தென்கொரியா. அப்படியானால் விரைவில் நமது நாட்டிலும் நாமும் பறக்கும் டாக்ஸியில் விரைவில் பறக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.

இந்தியாவின் முதல் சினிமா

இந்தியாவின் முதல் சினிமா "ராஜா ஹரிச்சந்திரா" என்ற படம் 1913ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி கருப்பு வெள்ளையில் வெளியானது. இது ஒரு மெளனப் படம். 40 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தவர் தாதா சாகிப் பால்கே. முதன் முதலில் மும்பையில் கோரோனேசன் சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா:. இப்படம் இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி இயக்கி அவரது இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்திருந்தது.   தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆர். நடராஜ முதலியார் என்பவரால் தயாரிக்கப்பட்ட "கீசக வதம்" என்ற மெளனப்படம், அவரது புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் 1916 இல் வெளியிடப்பட்டது.  தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்". இதுவும் 1931 இல் வெளியானது. எச்.எம் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியிருந்தார். இதன் மூலம் முதல் தமிழ் படத்தின் பாடலாசிரியர் என்ற பெருமைக்குரியவரானார்.

குழந்தைக்கு எமன்

15 நிமிடங்களுக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான சிந்தனை படைப்புகள் தற்காலிகமாக குறைவதாக, 3 வயதுடைய 60 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஜூனோ விண்கலம்

வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலம், வியாழன் கிரகத்தின் வளிமண்டலம், மேகங்கள் உள்ளிட்டவை குறித்தும் புதிய தகவல்களை அனுப்பியிருக்கிறது. வியாழன் கோளில் புயல் வீசியிருப்பதும், அம்மோனியா ஆறுகள் இதன் மூல் தெரியவந்துள்ளது.

இந்தியா தயாரித்த முதல் ராக்கெட்

அப்போது 1960களின் தொடக்கம். விக்ரம் சாராபாய் இந்தியாவுக்கான ராக்கெட் ஏவுதளத்துக்கான இடத்தை தேடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டுபிடித்ததுதான் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா என்ற இடம். தற்போது அது விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அங்கே இருந்த சர்ச் ஒன்றில்தான் அதன் அலுவலகம் செயல்பட்டது. அவ்வளவு ஏன் நாசா மற்றும் நைக் அப்பாச்சியின் உதிரிபாகங்கள் அங்குதான் ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டன. இந்த பாகங்கள் மாட்டு வண்டியில் எடுத்து வரப்பட்டன என்றால், முதன் முதலாக தயார் செய்யப்பட்ட  ராக்கெட் சைக்கிளில்தான் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..இன்றைக்கு உலக நாடுகளுக்கு இணையாக சந்திராயன் விண்ணில் பாயும் வேளையில் இந்தியாவின் முதல் காலடி இவ்வாறுதான் இருந்தது என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago