முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கோழிகள் காது மடல்களின் நிறத்திலேயே முட்டை இடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

கோழிகளுக்கு வெளிப்புறமாக தெரியும் வகையில் காதுகள் இல்லாவிட்டாலும், அவைகளுக்கும் காது மடல்கள் உள்ள. கோழிகளின் இனங்களை பொறுத்து காது மடல்களின்  வண்ணங்களும் அதற்கேற்ப மாறுபட்டு காணப்படும். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இது வழக்கமானதுதான். ஆனால் கோழிகள் தங்களின் காது மடல்களின் வண்ணத்திலேயே முட்டையிடும் என்பதுதான் ஆச்சரியம். வெள்ளை மடலை கொண்ட கோழி வெள்ளை முட்டையையும், அடர் வண்ணத்தை கொண்ட கோழி அடர் வண்ணத்திலும் முட்டையிடும் என்றால் அது ஆச்சரியம் தானே... இனி முட்டையை பார்க்கும் போது கூடவே உங்களுக்கு கோழிகளின் காது மடலும் நினவைுக்கு வரக் கூடும். ஆனால் ஒரே மாதிரி வெள்ளை வெளேரென முட்டையிடும் பிராய்லர் கோழிகளுக்கு இந்த விதி  பொருந்தாது என்பதை மறந்து விட வேண்டாம்.

தேவைக்கு பயன்படுத்த

ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்ததாக இருக்காது. சன் ஸ்க்ரீன் வெயிலில் தேங்காய் எண்ணெயால் போதிய பாதுகாப்பை வழங்க முடியாது. ஏனெனில் தேங்காய் எண்ணெயில் SPF 8 தான் உள்ளது.ஆனால் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்க குறைந்தது SPF 30 இருக்க வேண்டும். காயங்களில் இதை பயன்படுத்தினால், மிகுந்த எரிச்சலை சந்திக்கக்கூடும். உணவுகளை டீப் ப்ரை செய்வதற்கு சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயே சிறந்தது

8-வது அதிசயம்

உலகின் 8-வது இயற்கை அதிசயம் நியூசிலாந்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது. நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை உள்ளது. இதன் செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி  சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உண்டாகியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து உள்ளது. இச் செயற்பாடு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது ஆகும். இதனால் உலகின் 8-வது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது. ஆனால் இப் பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை. எவ்வாறெனினும் விரைவில் கண்கவர் அமைப்பில் உள்ள இவ்விடத்தினை உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகாலை எழுதல்

அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், அதிகாலையிலேயே இவர்கள் உறக்கம் கலைந்து எழுவதால்  மன அழுத்தத்தினாலும், உடல் பருமன் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதில்லையாம். இவர்கள், சராசரியாக காலை 6.58 மணிக்கு எழுவதாக தெரிவித்துள்ளனர்.

உடலில் 600 இடங்களில் டாட்டூ வரைந்து கொண்ட அழகி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாடல் அழகி தனது உடல் முழுக்க 600 இடங்களில் டாட்டூ குத்திக் கொண்டுள்ளது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் மனிதர்களின் ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் இருந்துவருகிறது. இன்றைய மாடர்ன் உலகில் டாட்டூ (Tattoo) என்ற பெயரில் இது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேனில் உள்ள வெஸ்ட்ஃபீல்டு பகுதிக்கு டாட்டூ மாடல் அழகி அம்பர் லூக் (26) ஷாப்பிங் சென்றார். உடல் முழுக்க அவர் டாட்டூ வரைந்திருந்ததால், அவரது தோற்றத்தைப் பார்த்ததும் அப்பகுதிமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இவர், சுமார் 600க்கும் மேற்பட்ட இடங்களில் தனது உடலில் டாட்டூ குத்தியுள்ளார். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.90 லட்சம் வரை செலவிட்டுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மனிதனுக்கு போட்டியாக...

லண்டனைச் சேர்ந்த குழு ஒன்று படம் வரையும் புதிய ரக ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளது. லைன் அஸ் (Line-us) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ கடினமான படங்களை கூட அழகாகவும் மிகக் குறுகிய நேரத்திலும் வரையக்கூடியது. சந்தைக்கு வரும் முன்னரே இணையதளத்தில் 30 மணி நேரத்தில் 1000 லைன் அஸ் ரோபோக்கள் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago