முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புகழ்பெற்ற கால்வாய்

78 கிமீ நீளமும் 33.5 மீட்டர் அகலமும் உடைய உலக புகழ்பெற்ற பனாமா கால்வாய், கட்டுமானப்பணி 1900களில் தொடங்கி, 1914 -ல் நிறைவடைந்தது. ட்ராபிக்கல் நோய் காரணமாக பனாமா கால்வாய் கட்டுமான பணியில் ஈடுப்பட்ட பிரெஞ்சு, ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த  27,500 தொழிலாளர் இறந்தனராம்.

மஞ்சளின் மகிமை

நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டுபிடித்துள்ளார். இவரது ஆய்வில், மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயன பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிய வந்துள்ளதையடுத்து, புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாலின் மகிமை

ஜூன் 1-ம் தேதி உலக பால் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பசுக்களின் பாலை மனிதன் அருந்தி வந்துள்ளான்.  உலகின் பால் தேவையை 90 சதவீதம் பூர்த்தி செய்யக் கூடியவை பசுக்களே. ஒரு பசுமாடு தன் ஆயுள் காலத்தில் 2 லட்சம் டம்ளர் பால் தரும். பண்ணை மாடுகளே உலகின் 90 சதவீத பால் தேவையை பூர்த்தி செய்கின்றன.

வியக்க வைக்கும் இளஞ்சிவப்பு ஏரி

ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற ஹில்லியர் ஏரி (Lake Hillier) இளஞ்சிவப்பு ஏரி எனப்படுகிறது. 1802 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் ரெச்செர்ச் தீவுக் கூட்டத்தின் 105 தீவுகளில் ராயல் நேவி எக்ஸ்ப்ளோரரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள கோல்ட் ஃபீல்ட்ஸ் எஸ்பெரன்ஸ் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த ஏரியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆண்டு முழுவதும் காணப்படும் அதன் இளஞ்சிவப்பு நிறம். அதற்கு என்ன காரணம்...இந்த ஏரியில் டுனாலியெல்லா சலினா என்று அழைக்கப்படும் உப்பு பாசி இனங்கள் மற்றும் ஹாலோபாக்டீரியா எனப்படும் இளஞ்சிவப்பு பாக்டீரியாக்கள், சிவப்பு ஆல்கா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உள்ளன. அதுதான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் நீரை பாட்டிலில் பிடித்தாலும் சிகப்பு நிறத்திலேயே காணப்படுமாம். ஆண்டு முழுவதும் ஏன் இந்த நிறம் தொடர்ந்து மாறாமல் இருக்கிறது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் விளக்கம் இதுவரை எதுவும் இல்லை. பிங்க் ஹில்லியர் இன்னும் அறிவியலுக்கு ஒரு மர்மமாகவே உள்ளது. ஆச்சரியமாக உள்ளது அல்லவா..

ஹேக்கர் உஷார்

ஹேக்கர்களிடம் இருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்க வலுவான பாஸ்வேர்டு வைத்து கொள்ள வேண்டும். உங்கள் போன் மறைகுறியாக்கப்பட்டதா? என்பதை செக் செய்யுங்கள். Encryted என்று கூறப்படும் இந்த பாதுகாப்பு அம்சம் என்பது டேட்டாவை ஓப்பன் செய்யும் முன் செய்ய வேண்டிய ஒரு பாதுகாப்பு வழியாகும். மேலும், போனில் உள்ள சாப்ட்வேர்களை அப்டேட் செய்ய வேண்டும்.

முதியவர்களுக்காக மட்டும்...

ஜப்பான் நாட்டை சார்ந்த 81 வது பாட்டி மசாக்கோ வகாமியா, வயது முதிர்ந்தவர்களுக்கான ஐபோன் செயலியை ஓன்றை வடிவமைத்துள்ளார். இந்த ஆப் முதியவர்கள் விளையாடும் மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஹினாடன் என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த ஆப் ஜப்பான் நாட்டின் பாரம்பரிய பொம்மை திருவிழாவான ஹினமட்சுரி என்ற திருவிழாவை அடிப்படையாக கொண்டது. இதில் குறிப்பிட்ட ஆடையணிந்த பொம்மைகளை ஹினமட்சுரி திருவிழாவில் வைக்கப்படும் வரிசையில் நிரப்பினால் வெற்றியடைவீர்கள். இந்த ஆப்பை உருவாக்கிய இவர், ஓய்வு பெற்ற வங்கியாளர். மேலும் தனது 60வது வயதில் கணினி பயிற்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago