முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

‘செல்பி’ மோகம்

‘செல்பி’ மோகத்தால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்த ஆய்வில், உலகிலேயே இந்தியாவில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 127 பேர் ‘செல்பி’ மோகத்தால் உயிரிழந்ததாகவும், இதில், 76 உயிரிழப்புகள் இந்தியாவில் நடந்தவை என்றும் தெரியவந்துள்ளது.

துரித உணவுகள்

துரித உணவுகளை இரவில் அதிகமாகச் சாப்பிடுவதாலும், நேரம் கழித்து சாப்பிடுவதாலும், காலையில் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். துரித உணவுகளில் இருக்கும் மைதா, சீஸ், சமையல் சோடா போன்றவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, உடலுக்கு அதிக கலோரியைக் கொடுத்து, பசியை அடக்கி, நீண்ட நேரத்துக்குப் பசிஉணர்வே ஏற்படாமல் செய்யும்.

ஆச்சர்ய தொழில்நுட்பம்

கருவில் சிசு வளரும் போதே அதை, நேரில் காண வழிவகுத்துள்ளது புதியதோர் தொழில்நுட்பம். இதன் மூலம், ஒரு தாய் தன் குழந்தையை கண்டும் உள்ளார். விர்சுவல் ரியாலிட்டிதான் அந்த தொழில்நுட்பம். இதன் மூலமாக இல்லாத ஒன்றையும் காண்பிக்க முடியும். 4D அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து, பிறக்காத குழந்தயை வி.ஆர். தொழில் நுட்பத்தின் மூலம் இதை செயல்படுத்தியும் காட்டியுள்ளனர். 3D அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மூலம் படமாக மட்டுமே கருவில் வளரும் சிசுவை பார்த்த நாம், இந்த புதிய தொழில்நுட்பத்தில் காணொளியாகவே குழந்தையை காண முடியுமாம். எதிர்காலத்தில் கருத்தரித்த நாள் முதலே கூட தன் சிசுவுடன் பெற்றோர் வி.ஆர் முறையில் வாழலாம்.

புத்துணர்வு தரும்

பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல் பாதுகாக்க முடிகிறது. கேரட், தக்காளியை பொடியாக நறுக்கி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து அதில் கருப்பு உப்பு, சீரகத்தூள், புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தினால்,  உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.

உலகிலேயே அதிக காஸ்ட்லியான நகரம் எது தெரியுமா?

உலகிலேயே அதிக காஸ்ட்லியான நகரம் எது தெரியுமா.. நீங்கள் கற்பனை செய்வது போல அமெரிக்காவில் உள்ள நியூயார்க் அல்லது வாஷிங்டன், சவுதி அரேபியாவில் உள்ள துபாய், ரியாத் என்று கற்பனை குதிரையை தட்டி விட்டீர்கள் என்றால் அதை கொஞ்சம் நிறுத்துங்கள். இது முற்றிலும் யாரும் எதிர்பாராத ஒன்றாகும். உலகிலேயே அதிக காஸ்ட்லியான நகரம் இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் தான். ஆகஸ்ட் -செப்டம்பர் நிலவரப்படி உலகில் காஸ்ட்லியான நகரங்கள் என பட்டியலிடப்பட்ட 173 நகரங்களில் டெல் அவிவ் தான் முதலிடம் பிடித்துள்ளது. பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. ஜூரிச் 4 ஆவது நகரம், ஹாங்காங் 5 ஆவது இடம். நியூயார்க் நகரத்துக்கு 6 ஆவது இடம் தான் கிடைத்துள்ளது. ஜெனீவா 7, கோபன்ஹேகன்8, லாஸ் ஏஞ்சல்ஸ்9 ஓசாகா 10 என பட்டியலில் இடம் பிடித்துள்ளன. கடந்தாண்டு பாரீஸ், ஜூரிச், ஹாங்காங் ஆகியவை பட்டியலில் முன்னணியில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மாதுளை நன்மை

இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை எளிதில் ஜீரணமாகும் பழம். இதன் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் ஏற்படும் சோர்வு நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இது இருக்கிறது. ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago