முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

13 ஆயிரம் கிமீ நிற்காமல் பறக்கும் பறவை

மனிதர்களுக்கு அதிலும் பயிற்சி பெற்றவர்களுக்கே சும்மா ஒரு 2 கிமீ ஓடினாலே நாக்கு வறண்டு விடும். தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். 13 ஆயிரம் கிமீ அதிலும் 10 நாட்கள் நிற்காமல் அன்னம் தண்ணி புழங்காமல் ஒரு சிறிய பறவை பறக்கிறது என்றால் ஆச்சரியம் தானே. Bar-tailed Godwit என்ற நாரை வகையைச் சேர்ந்த பறவைதான் இந்த சாகசக்காரி. அமெரிக்காவின் அலாஸ்காவில் வசிக்கும் இது இனப்பெருக்கத்துக்காக பசிபிக் பெருங்கடலை கடக்கிறது. 13 ஆயிரம் கிமீ கடந்து நியூஸிலாந்து செல்கிறது. இடையில் எங்கும் நிற்காமல்.. எங்கு நிற்க.. அதுதான் கடலாச்சே.. இரை தண்ணீர் கூட எடுக்காமல் 10 நாள் பயணம்.  இதை நம்பாத விஞ்ஞானிகள் இருக்கிறார்களே... அதற்காகவே இதன் காலில் ஜிபிஎஸ், சென்சர் என்ற கண்ட கருமாந்திரங்களையும் வைத்து ஆராய்ந்ததில் அது உண்மை தான் என்பது உறுதியானது. ஆனால் எப்படி? 10 நாள் எதுவும் சாப்பிடாமல்... விஞ்ஞானிகள் மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவும் தெரியாமல் Bar-tailed Godwit அது தன்பாட்டுக்கு கடல் மீது பறந்து கொண்டிருக்கிறது.

புதிய தீர்வு

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள யுனிவர்சிடட் கரோல்ஸ் 3டி மாட்ரிட் என்ற நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் பிரைலி மூலம் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப் உருவாக்கி அதன் மூலம் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் டி.வி. நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதன் சோதனை ஓட்டம் மாட்ரிட் நகரில் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்தது.

கையில் ஆபத்து

அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், மூளையில் பதிய வைக்கும் திறன் குறைந்து, நாளடைவில் படிப்படியாக முக்கியமானவர்கள் தொடர்பு எண் முதற்கொண்டு வீட்டு முகவரி வரை அனைத்தையும் மறக்கும் நிலை ஏற்படுகிறது. இதையே நாம் டிஜிட்டல் அம்னீசியா என்கிறோம். எனவே, இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்மார்ட் போன்களின் உபயோகத்தை குறைப்பது நல்லது.

வீட்டு குறிப்பு

ஐம்பது கிராம் கொல்லையும், ஐம்பது கிராம் புளியும், 300 மில்லி அளவு வெந்நீரில் இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றச்செய்யவேண்டும். வற்றியதும் வடிகட்டி சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகினால்  பசி தூண்டப்படும், செரிமானம் அதிகரிக்கும்.

உணவு தேவையை பூர்த்தி செய்ய செயற்கை இறைச்சி - புதிய முயற்சி

ஐஸ்லாந்து நாட்டில் உணவு தேவையை பூர்த்தி செய்ய புதிய முயற்சியாக ஆய்வகத்தில் செயற்கை இறைச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. விலங்குகள், அதற்கான தீவனங்கள், அதை உற்பத்தி செய்வதற்கான தாவரங்கள் என்ற நீண்ட சங்கிலி படிப்படியாக நெருக்கடிக்கு உள்ளாகி வரும் வேளையில் செயற்கை இறைச்சி இவற்றை வெகுவாக குறைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஓ.ஆர்.எஃப் ஜெனிட்டிக்ஸ் நிறுவனத்தின் புரதத் தொழில்நுட்பத்துறை தலைவர் அர்னா ருனாஸ்டாட்டிர் கூறுகையில், மாடுகளின் ஸ்டெம் செல்களை வைத்து ஆய்வுக்கூடங்களிலேயே பீஃப் பர்கர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், வறுத்த இறைச்சியைத் தயாரிக்கும் நிறுவனங்களும் விரைவில் உருவாக உள்ளன.  எனவே இவை விரைவில் சந்தைக்கு வரும் என்கிறார்.ஏற்கனவே செயற்கை சிக்கனுக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல விண்வெளி செல்லும் வீரர்களுக்கு நாசா வான்கோழியின் செல்களை பயன்படுத்தி  கோழி இறைச்சியை தயார் செய்து வருவதும் கவனத்தில் கொள்ளக் கூடியதாகும்.

உடற்பயிற்சி

நாம் எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடலும், மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பது முக்கியம். உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவது அல்ல. உடலை வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.  எனவே ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago