முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பகலில் குட்டி தூக்கம் போடுங்க - வல்லுநர்கள் சொல்லும் யோசனை

அலுவலகத்திலோ, கல்விக் கூடங்களிலோ தூங்குபவர்களை நாம் கேலி செய்வதுண்டு. பகல் கனவு பழிக்காது என்பது நமது பழமொழி. ஆனால் அண்மையில் வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில் பகலில் குட்டி தூக்கம் போட்டால் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்கின்றனர். புத்துணர்ச்சி, படைப்பாற்றல், கற்பனைத் திறன், உற்சாகம், நினைவாற்றல், புதுமையான சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், ஆராயும் திறன்  கிடைக்கும் என்கின்றனர். கணினியில் இருப்பது போல நமது ஆற்றல் குறையும்போது ஒரு 'ரீஸ்டார்ட் பட்டனை' அழுத்தி மீண்டும் 'சார்ஜ்' செய்து கொண்டால் எப்படியிருக்கும்? இம்மாதிரியான ஒரு ரீஸ்டார்ட் பட்டனாக 'நாப்' எனப்படும் 'குட்டித்தூக்கம்' இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தூக்கத்திலிருந்து விழித்து கொள்ளும் நேரம் முதல் நமது மூளையில் 'அடினோசின்' எனும் ரசாயனம் அதிகரித்து கொண்டே செல்லும். எனவே நீங்கள் அதிக நேரம் விழித்து கொண்டிருக்கும்போது உங்கள் மூளையில் அடினோசின் அதிகமாகும். அது தூக்க உணர்வை அதிகரிக்கும். குறைந்தது 90 நிமிடங்கள் தூங்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். இதெல்லாம் நடக்கிற காரியமா என நினைக்கிறவர்களுக்கு இருக்கவே இருக்கிறது யோகா..தியானம்.. இத்யாதி..

மரபணு மாற்றம்

விண்வெளிப் பயணங்களால் மனிதர்களின் மரபணு அளவில் மாறுபாடு ஏற்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. விண்வெளியில் ஒருவருடத்துக்கு மேல் செலவிட்ட அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி மற்றும் அவர் உடன் பிறந்த இரட்டையரான மார்க் கெல்லி ஆகியோரிடம் நடத்திய ஆய்வின் முடிவின் தெரிவித்துள்ளது.

இன்ஃப்ராரெட் வைபை

உலகில் தற்சமயம் பயன்படுத்தப்படும் வைபை வேகத்தை விட 300 மடங்கு வேகமாக இண்டர்நெட் வேகம் வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை டட்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மின்சார கதிர்களை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்யும் புதிய வழிமுறையை கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதிர்களும் அதிவேக திறன் கொண்ட சேனல் போன்று வேலை செய்கிறது. இந்த கதிர்கள் அனைத்தும் ஆப்டிக்கல் ஃபைபர் போன்று வேலை செய்கிறது. புதிய வயர்லெஸ் வழிமுறைகளின் முதற்கட்ட சோதனைகளில் நொடிக்கு 112 ஜிபி வேகத்தை வழங்குகிறது.   இந்த வேகம் கொண்டு மூன்று எச்டி திரைப்படங்களை ஒரே நொடியில் முழுமையாக டவுன்லோடு செய்ய முடியுமாம்.

இயந்திர மனித போலீஸ்

சீனாவில் ஹெனான் உள்ள லேங்க்லோ கிழக்கு ரயில்வே நிலையத்தில் ரோந்து பணிக்கு  இயந்திர மனிதன் பயன்படுத்தப்படுகிறது. முதல் நாளே அங்கு மூண்ட சிறு தீயைக் கண்டறிந்தது அந்த இயந்திர மனிதன். 1.6 மீட்டர் உயரமான இந்த இயந்திர மனித போலீஸ், குற்றவாளிகளையும், சந்தேகப்படும்படி யாரேனும் இருந்தால் அவர்களையும் முகத்தை வைத்து அடையாளம் காணும். தற்போது செங்ச்சாவ் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுவரும் அந்த எந்திரன் போலீஸ், அங்கு பணிபுரியும் ஊழியர்களையும் அவர்களது அடையாள அட்டை கொண்டு சரியாக அடையாளம் காண்கிறதாம்.

வந்திருச்சு புதுசு

எவர்லாஸ்ட் நோட்புக் மூலம் எழுதுவதை டிஜிட்டலாக சேமிக்க வசதி வந்தாச்சு. இந்த நோட்புக்கில், எழுதலாம், பதிவு செய்து வைக்கலாம். கூடுதலாக, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றிலும் பகிரலாம். க்ளவுட் முறையில் கூகுள் ட்ரைவ் உள்ளிட்டவற்றில் கோப்புகளை சேமிக்கவும் வசதியுண்டு.

மத்யாசனம்

தோள்பட்டை கழுத்து வலியால் அவதிப்படுபவர்களுக்கு மத்யாசனம் சிறந்த தீர்வு. இந்த யோகா செய்வதால், மன அழுத்தம், கழுத்துவலி, நரம்பு பிரச்சனை ஆகியவை தீரும். அதேபோல் வயிற்று பகுதியில் அழுத்தம் தரப்படுவதால் கொழுப்புகள் குறைந்து தொப்பை குறைய வழிவகுக்கும். சுவாசத்தை சீர்படுத்தும். மார்புக் கூடு விரிவடையும். தைராய்டு சுரப்பிகள் நன்றாக இயங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago