முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      தமிழகம்
Vikravandi 2024-06-28

Source: provided

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  வரும் 10-ம்  தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள்  வரும் 13-ம்  தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. 

இத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகியவை ஏற்கனவே விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் 1,15,749 ஆண் வாக்காளர்களும், 1,18,393 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 31 பேரும் ஆக மொத்தம் 2,34,173 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வீடு, வீடாக சென்று வினியோகம் செய்வதற்காக மாவட்ட தேர்தல் அலுவலகமான கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பூத் சிலிப்கள் வாகனம் மூலம் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த பூத் சிலிப்புகளை தாலுகா அலுவலக ஊழியர்கள் தனித்தனியாக பிரித்து வாக்காளர் பட்டியலின்படி சரிபார்த்து தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் முடிந்ததும் அந்த பூத் சிலிப்புகள் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு அவை ஓரிரு நாளில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து