முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை: புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      இந்தியா
amit-shah 1

Source: provided

புதுடெல்லி : புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கொடுப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இந்திய குற்றவியல் சட்டம் (ஐ.பி.சி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி.) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐ.இ.சி.) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் சட்டங்களின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோடு மட்டுமில்லாமல், குற்றவியல் நீதி முறையை சுதந்திரமாக மாற்றியுள்ளது. இந்தச் சட்டங்கள் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே உள்ளன.

சுதந்திரம் அடைந்து சுமார் 77 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது குற்றவியல் நீதி அமைப்பு முற்றிலும் சுதந்திரமாக மாறியதற்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். புதிய சட்டங்கள் இனி இந்திய நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்படும். 

இன்று(நேற்று) முதல் காலனித்துவ சட்டங்கள் அகற்றப்பட்டு, பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றன. தாமதத்துக்குப் பதிலாக, இனி விரைவான விசாரணை மற்றும் நீதி கிடைக்கும். 

முன்பு பழைய குற்றவியல் சட்டங்கள் மூலம் காவல் துறையின் உரிமைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டன. ஆனால், இப்போது ​​புதிய சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கொடுப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களால் பலர் பயனடைவார்கள் என்று தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் போதிய விவாதம் இல்லாமல் புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக  எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா,  நாட்டின் வரலாற்றில் இந்தச் சட்டத்தை போல் வேறு எந்த சட்டமும் இவ்வளவு விரிவாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை என்று கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து