முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      தமிழகம்
Ma Subramani-2023-11-09

Source: provided

சென்னை : மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன், காலியாக உள்ள 3,645 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2024-ம் ஆண்டில் மருத்துவத்துறையில் 21 பிரிவுகளில், 3,645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அவர் சட்டசபையில் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

உதவி மருத்துவர் (பொது) பதவியில் உள்ள 2,553 பணியிடங்கள், உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் உள்ள 26 பணியிடங்கள், மருந்தாளுநர் பதவியில் உள்ள 425 இடங்கள், கிராம சுகாதார செவிலியர்/தாய்மை துணை செவிலியர் பதவியில் உள்ள 367 இடங்கள், கண் மருத்துவ உதவியாளர் பதவியில் உள்ள 100 இடங்கள், மருந்தாளுநர் (சித்தா) பதவியில் உள்ள 49 இடங்கள், உள்ளிட்ட 21 வகை பதவிகளில் காலியாக உள்ள 3,645 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வுகளிலும், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் இடம்பெறும். தேர்வுகளை நெறிப்படுத்தி, வலுவான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒளிவுமறைவற்ற வகையில் தேர்வுகளை நடத்தி முடிக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் தெரிவிக்கையில்., சென்னை கே.கே. நகரில் ரூ. 50 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்டும். கிண்டி மற்றும் தஞ்சையில் ரூ. 250 மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். தமிழகத்தில் புதிதாக 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய வலியுறுத்தப்படும். தமிழகத்தில் மாவட்டந்தோறும் போதை மீட்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றார்.

ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்த அவர், சென்னையில் ரூ.50 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் பாத சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். சென்னையில் ரூ.250 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து