முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

90 வருட பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஸ்மிரிதி-ஷபாலி ஜோடி

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      விளையாட்டு
Smriti-Shapali 2024-06-28

Source: provided

சேப்பாக்கம் : 90 வருட பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனைப் படைத்துள்ளது இந்திய அணியின் ஸ்மிரிதி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி.

பேட்டிங் தேர்வு...

இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஆகியோம் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். இந்தியா 292 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிரிதி மந்தனா 161 பந்தில் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்.... 

இதற்கு முன்னதாக பெண்கள் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு 250 ரன்களுக்கு மேல் அடித்தது கிடையாது. தற்போது 292 ரன்கள் விளாசி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி சாதனைப் படைத்துள்ளது. இதன்மூலம் 90 வருட பெண்கள் கிரிக்கெட்டில் அரிய சாதனையை படைத்துள்ளது. ஷபாலி வர்மா 150 ரன்களை கடந்து விளையாடினார். 65 ஓவர் முடிந்த நிலையில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 365 ரன்கள் குவித்திருந்தது. 

இரட்டை சதம்... 

இதையடுத்து களம் இறங்கிய சுபா சதீஷ் 15 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடியது. ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஷபாலி வர்மா 194 பந்தில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் இரட்டை சதம் அடித்த நிலையில் 205 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இந்திய அணி இதுவரை 75 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து