முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      தமிழகம்
Chennai-high-court2

Source: provided

சென்னை : கள்ளக்குறிச்சி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ள சென்னை ஐகோர்ட், கல்வராயன் மலையில் வேலைவாய்ப்பு இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சுகின்றனர் என்று அதிருப்தி தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் தலைமைச் செயலாளர், டிஜிபி, மத்திய, மாநில பழங்குடியின நலத்துறை, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த 18ம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சாராயம் குடித்தவா்களில் சிலர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், சிலா் சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் 10க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியது. மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி தொலைகாட்சியில் அளித்த நேர்காணல் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து நீதிபதிகள் கூறும் போது, கல்வராயன் மலையில் வேலைவாய்ப்பின்றி உள்ளூர்வாசிகளால் கள்ளச்சாராம் காய்ச்சப்படுகிறது. கல்வராயன் மலைப்பகுதியில் எந்த வேலைவாய்ப்பும் இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் நிலை உள்ளது. கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டியுள்ளது. தமிழக தலைமை செயலாளர், மத்திய மாநில பழங்குடியின நலத்துறை, டிஜிபி, சேலம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் இந்த விவகாரத்தில் பதில் அளிக்க உத்தரவிடப்படுகிறது என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து