முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோவில் சொர்க்கத்தை பிளாட் போட்டு விற்ற தேவாலயம் : இணையத்தில் வீடியோ வைரல்

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      உலகம்
Mexico 2024-06-29

Source: provided

மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் (சுமார் ரூ. 8,336) என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. 

மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயத்தில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த தேவாலயத்தின் பாதிரியார் கடந்த 2017-ம் ஆண்டு கடவுளை சந்தித்தார் எனவும் அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது. 

சொர்க்கத்தில் ஒரு சதுரடியின் ஆரம்ப விலை நூறு டாலர்கள், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜி.பே ஆப்பிள் பே உள்ளிட்ட தளங்களின் மூலம் ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.  

வலை தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இந்த தேவாலயம் விளையாட்டாகவே இந்த வியாபாரத்தை  தொடங்கியுள்ளது. ஆனால் இதை சீரியஸாக எடுத்துக் கொண்ட பக்தர்கள், வாடிக்கையாளர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 days 18 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 days 18 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து