முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்கையா நாயுடுவின் சுயசரிதை புத்தகங்கள் : பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      இந்தியா
MODI 2023 04 30

Source: provided

புதுடெல்லி : வெங்கையா நாயுடுவின் சுயசரிதை தொடர்பான 3 புத்தகங்களை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார். 

இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றவர் வெங்கையா நாயுடு. இவர் ஆகஸ்ட் 11, 2017 முதல் ஆகஸ்ட் 10, 2022 வரை துணை ஜனாதிபதியாக பதவி வகித்தார். 

வெங்கையா நாயுடு இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு வெங்கையா நாயுடுவின் சுயசரிதை தொடர்பான 3 புத்தகங்களை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக வெளியிட உள்ளார். 

இதன்படி முன்னாள் நாளிதழ் ஆசிரியர் எஸ். நாகேஷ் குமார் எழுதிய வெங்கையா நாயுடு- லைப் இன் சர்வீஸ் என்ற வாழ்க்கை வரலாறு புத்தகம், வெங்கையா நாயுடுவின் முன்னாள் செயலாளரான சுப்பா ராவின், செலிபிரேட்டிங் பாரத்- இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு என்ற புகைப்பட தொகுப்பு புத்தகம், தெலுங்கு மொழியில் சஞ்சய் கிஷோர் எழுதிய, மகாநேடா - வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை மற்றும் பயணம் என்ற புத்தகம் ஆகிய 3 புத்தகங்களை பிரதமர் மோடி இன்று வெளியிட உள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 days 18 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 days 18 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து