முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண்மை துறைக்கு தேர்வான 133 பேருக்கு பணி நியமன ஆணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      தமிழகம்
CM-1 2024-06-29

Source: provided

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 133 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் 48 வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். 

வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலியாக உள்ள  வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2023-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு மூலம் 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் 48 வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டனர். 

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். இதன்மூலம், வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் விவசாய பெருங்குடி மக்களுக்கு விரைவில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

புதிதாக அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்ட தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும்  வேளாண்மை அலுவலர்கள் இப்பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுகளை வெளியிட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கியதற்காக முதல்வருக்கும், தமிழக அரசிற்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில்,  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச்செயலாளர்  அபூர்வா,  வேளாண்மை-உழவர் நலத்துறை சிறப்புச்செயலாளர் முனைவர். பொ.சங்கர்,  வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல்பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து