முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மழையால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      இந்தியா
Delhi 2024-06-28

Source: provided

புதுடெல்லி : தலைநகரில் பெய்த கனமழை காரணமாக வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப்பணியிடத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்காரணமாக டெல்லியில் மழை தொடர்பான சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 

டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப் பணியிடத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்ட டெல்லி தீயணைப்புத் துறையினருக்கு (டிஎஸ்எஃப்) நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்தது. இதுகுறித்து டிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறும்போது, “கட்டுமானப் பணியிடத்தில் நடந்த விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் இருவர் சந்தோஷ் குமார் யாதவர் (19) மற்றும் சந்தோஷ் (38) என்பது தெரியவந்துள்ளது. மூன்றாமவர் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இடிபாடுகளை அகற்ற கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டுமான குழிகளில் இருந்த மழைநீரை அகற்ற மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன இடிபாடுகளில் இன்னும் யாரவது சிக்கியிருக்கிறார்களா என்று அறிய தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர், காவல் அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

இவை தவிர, பருவ மழைத் தொடங்கி உள்ள டெல்லியில் கடந்த 88 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஜூன் மாதத்தில் அதிக மழை பொழிந்த நிலையில் மழைத் தொடர்பான விபத்துக்களில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 மேற்கூரை இடிந்து விழுந்து கார் ஓட்டுநர், ரோகினி பிரேம் நகர் பகுதியில் மின்சாரம் பாய்ந்து 39 வயது ஆண் ஒருவர், நியூ உஸ்மான்பூர் மற்றும் ஷாலிமார் பாக் பகுதிகளில் தண்ணீரில் மூழ்கி 3 பேர் அடங்குவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து