முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      தமிழகம்
Kallanai-2024-07-30

தஞ்சை, காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன் மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய உரிமை தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலும், இயற்கையின் கொடையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து தண்ணீர் பெருகி உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையை நிரம்ப வைக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று முன்தினம் 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு இன்று(புதன்கிழமை) அதிகாலை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு இன்று காலை 9.15 மணியளவில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று நீர்வள ஆதாரதுறையினர் தெரிவித்துள்ளனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் காவிரி டெல்டா மாவட்ட அமைச்சர்கள், டெல்டா மாவட்ட கலெக்டர்கள், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை நீர்வள ஆதார துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து