முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து ஒருவரை துணை முதல்வர் ஆக்கியுள்ளோம் : முதல்வர் உமர் அப்துல்லா பேச்சு

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      இந்தியா
Umar-Abdullah 2024-10-16

Source: provided

ஜம்மு : எங்களை முஸ்லிம் கட்சி என்றார்கள்; இந்து ஒருவரை துணை முதல்வர் ஆக்கியிருக்கிறோம்:  உமர் அப்துல்லா

ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்முவில் கட்சி தொண்டர்களிடையே நேற்று பேசினார். அவர் பேசும்போது, கடந்த தேர்தலின்போது, தேசியவாத மாநாட்டு கட்சி முஸ்லிம்களுக்கான கட்சி என எல்லோரும் கூறி வந்தனர். இது காஷ்மீரிகளுக்கான ஓர் அமைப்பு என்றும் கூறினர்.

ஆனால், ஜம்முவில் இருந்து ஒருவரை துணை முதல்வராக ஆக்கியிருக்கிறோம். அவர் ஓர் இந்து. அவர்கள் தற்போது என்ன கூறுவார்கள்? என்று பேசியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின் மற்றும் 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும். இதில், தேசியவாத மாநாட்டு கட்சி 42 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது. ஜம்முவின் அனைத்து பகுதிகளிலும் அக்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய தேசியவாத மாநாட்டு கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா முதல்வராகவும் , அக்கட்சியை சேர்ந்த சுரீந்தர் குமார் சவுத்ரி, துணை முதல்வராகவும் பதவி ஏற்று கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து