முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., பயங்கரவாதிகல் ஊடுருவல்:காஷ்மீருக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      இந்தியா
India-Border 2023-06-08

Source: provided

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 600 கமாண்டோக்கள், காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா மற்றும் முன்னாள் டிஜிபி ஷேஸ் பால் வைத் ஆகியோர் கூறியுள்ளனர். இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.

இது தொடர்பாக அம்ஜத் அயுப்மிர்சா வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு பயிற்சி பெற்ற குழு (எஸ்எஸ்ஜி) அதிகாரி அதில் ரெஹ்மானி, காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறார். எஸ்எஸ்ஜி பட்டாலியனின் 600 கமாண்டோக்கள் குப்வாரா உள்ளிட்ட பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளனர். உள்ளூர் ஜிகாதி குழுவினர், அவர்களுக்கு உதவுகின்றனர். பூஞ்ச், உரி, ரஜோரி ஆகிய பகுதிகளில் தலா 150 பேர், 3 குழுக்களாக பிரிந்து ஊடுருவி உள்ளனர்.

எஸ்எஸ்ஜி குழுவில் லெப்டினன்ட் காலினல் அந்தஸ்தில் உள்ள ஷாகித் சலீம் ஜன்ஜூவா, தற்போது காஷ்மீரில் ஊடுருவி உள்ளார். இவர், தாக்குதல் நடத்தும் திட்டங்களை தயாரித்து வருகிறார். இந்திய ராணுவத்தின் 15 கார்ப்ஸ் பிரிவினருடன் மோதுவதே இவர்களின் நோக்கமாக உள்ளது. 

காஷ்மீருக்குள் ஊடுருவ எஸ்எஸ்ஜி குழுவின் இரண்டு பட்டாலியன்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. சுமைதூக்கும் தொழிலாளிகள் மற்றும் சாமானிய மக்கள் போல் ஊடுருவி உள்ள இவர்கள், மக்களுடன் கலந்து மறைந்துள்ளனர். தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

இதனையடுத்து காஷ்மீரில், இந்திய ராணுவத்தினர் கிராமம், கிராமமாக தீவிரமாக கமாண்டோக்களை தேடி வருகின்றனர். இந்த பணியை பிரதமர் அலுவலகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. தேடும் பணி குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய ராணுவ தளபதிக்கு அறிக்கை அளித்து வருகின்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கூறப்படும் பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து