முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலை இழந்தோருக்கு 6 மாதங்களுக்கு நிதியுதவி : சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      உலகம்
Lawrence-Wong 2024 08 19

Source: provided

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் வேலை இழந்தோருக்கு உதவி செய்யும் வகையில், 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டாலர் வரை (இந்திய மதிப்புபடி, ரூ. 3 லட்சத்து 83 ஆயிரம்) நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு, சர்வதேச அளவில் தொழில் மந்த நிலை காரணமாக, சிங்கப்பூர் நாட்டில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் ஸ்கில்ஸ்பியூச்சர் ஆதரவுத் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டாலர் வரை (இந்திய மதிப்பு படி, ரூ. 3 லட்சத்து 83 ஆயிரம்) நிதியுதவி வழங்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது தங்கள் நிறுவனங்கள் நஷ்டம் அடையும் போது வேலை இழப்பவர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த ஆண்டின், தேசிய தினப் பேரணியில் பிரதமர் லாரன்ஸ் வோங் பேசுகையில்,  

வேலையை இழந்தோருக்கு, ஸ்கில்ஸ்பியூச்சர் ஆதரவுத் திட்டத்தின் கீழ், ஆறு மாதங்கள் வரை நிதியுதவி வழங்க உள்ளோம். இந்த பணம், அவர்கள் வேலை தேடுவதற்கும், தொழில் பயிற்சி மேற்கொள்வதற்கும் உதவிகரமாக இருக்கும். நாங்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்.

சில நாடுகளில் வேலையில்லாதோருக்கான காப்புறுதித் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அதை விட சிறப்பாக செய்ய சிங்கப்பூர் அரசு விரும்புகிறது. ஸ்கில்ஸ்பியூச்சர் திட்டம் குறித்து விவரங்களை, விரைவில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெளியிடுவார் என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து