முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு புகார்: நான் எந்தத்தவறும் செய்யவில்லை: முதல்வர் சித்தராமையா விளக்கம்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      இந்தியா
Siddaramaiah 2023 04 16

பெங்களூரு, தான் எந்தத் தவறும் செய்யவில்லை, மத்திய பாஜக அரசு சதி வேலையில் ஈடுபடுகிறது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரில், தலைமைச் செயலாளர், அதிகாரிகளிடம் அறிக்கை பெற்ற கவர்னர், சித்தராமையாவுக்கும் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கவர்னரின் இந்த ஒப்புதலுக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய சித்தராமையா, 'நான் எந்த தவறும் செய்யவில்லை, என் மீது வழக்குத் தொடர தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பிரபல வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இந்த வழக்கில் வாதாடுகிறார். என் மனசாட்சி தெளிவாக உள்ளது. 40 ஆண்டுகள் அமைச்சராக இருந்த எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளி கூட இல்லை. என் மீது எந்தத் தவறும் இல்லை என கர்நாடக மக்களுக்குத் தெரியும்.

ராஜ்பவனைப் பயன்படுத்தி தனக்கு எதிராக பாஜக, ஜேடிஎஸ், இணைந்து சதி செய்கிறது. என் மீது அவதூறு பரப்புவதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். தீய நோக்கத்துடன் பாஜக போராட்டம் நடத்துகிறது. இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம். சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுப்போம். பாஜக என்னுடைய அரசியல் வாழ்க்கையை முடித்துவிடலாம் என்று நினைக்கிறது. நாங்கள் கூறிய திட்டங்களை செயல்படுத்துவது அவர்களை தொந்தரவு செய்கிறது. நான் ஏழைகளுக்கு ஆதரவாக இருப்பதுதான் எதிர்க்கட்சிகளின் பயத்திற்கு காரணம்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து