முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை மாற்றத்தின்போது புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து அமைச்சரவை மாற்றமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சேலம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. வரும் 23-ந்தேதி தமிழக அமைச்சரவை மாற்றப்படலாம் என்றும் ஏற்கனவே அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஏற்கனவே 2 முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக இந்த அமைச்சரவை மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அவரை துணை முதல்வர் ஆக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து