முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்கு பேஜர் வெடிப்பு காரணமா? ஈரான் எம்.பி. சந்தேகம்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      உலகம்
Iran 2024-03-24

டெக்ரான், ஈரான் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்துக்கு பேஜர் வெடிப்பும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் எம்.பி. அகமது சந்தேகம் எழுப்பியுள்ளார். 

மறைந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் வெளியுறவு அமைச்சர் உசைன் அமீர் அப்துல்லாயன் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். கடும் பனி சூழ்ந்த வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்தது என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்தது.

இதற்கிடையே, லெபனானில் கடந்த வாரம் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி கருவிகளால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களில் சுமார் 40 பேர்  பலியாகினர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஈரான் முன்னாள் அதிபரான இப்ராகிம் ரெய்சியும் பேஜர் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார் என அந்நாட்டு எம்.பி.யான அகமது பக்ஷயேஷ் அர்தேஸ்தானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகமது கூறுகையில், 

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஒரு பேஜரை பயன்படுத்தினார். அவர் பயன்படுத்திய பேஜரின் வகை ஹிஸ்புல்லா படைகளிடம் இருந்து வேறுபட்டதாக இருக்கலாம். இருப்பினும், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான சாத்தியமான காட்சிகளில் ஒன்று அவரது பேஜர் வெடித்திருக்கலாம். 

பேஜர்களை வாங்குவதில் ஈரான் பங்கு வகித்துள்ளது. ஈரானியப் படைகள் நிச்சயமாக ஹிஸ்புல்லாக்கள் பேஜர்களை வாங்குவதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. எனவே, எங்கள் சொந்த புலனாய்வு அமைப்புகளும் இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து