முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு - காஷ்மீரில் இன்று 2ம் கட்ட சட்டசபை தேர்தல்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      இந்தியா
Electronic-Machine 2023-10-

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரில் இன்று 26 தொகுதிகளில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இன்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

2ம் கட்ட தேர்தலில் 27 லட்சத்து 78 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதேவேளை, வாக்களிக்க 3 ஆயிரத்து 502 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதேபோல், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து எஞ்சிய 40 தொகுதிகளுக்கும் அடுத்தமாதம் 1ம் தேதி 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்தமாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து