முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      இந்தியா
Siddaramaiah 2023 04 16

பெங்களூரு, நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மூடா 'முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் முதல்வர் சித்தராமையா தொடர்ந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சித்தராமையா தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையாவின் வீட்டிற்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சர்கல் சென்றனர். மேலும் நீதிமன்ற உத்தரவினால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலியாக முதல்வர் சித்தராமையா சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் விசாரணைக்கு தயங்கமாட்டேன். சட்டப்படி இதுபோன்ற விசாரணை அனுமதிக்கப்படுகிறதா இல்லையா என்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அடுத்த சில நாட்களில் உண்மை வெளிவரும், 17ஏ-வின் கீழ் விசாரணை ரத்து செய்யப்படும் என்று நம்புகிறேன். இந்த அரசியல் போராட்டத்தில் மாநில மக்கள் எனக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

அவர்களின் ஆசீர்வாதமே எனது பாதுகாப்பு. நான் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்தப் போராட்டத்தில் உண்மையே வெற்றி பெறும். பாஜக மற்றும் ஜேடி(எஸ்) -ன் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிரான எங்களது நீதி போராட்டம் தொடரும். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் ஏழைகளுக்கு ஆதரவாகவும், சமூக நீதிக்காகவும் போராடி வருவதால், பாஜக மற்றும் ஜேடி(எஸ்) என் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து