முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப் ஆண்டவருக்கு உடல்நலக் குறைவு: பொதுமக்களுடனான சந்திப்பு ரத்து

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      உலகம்
Pope 2023 06 17

வாடிகன் சிட்டி, உடல்நலக்குறைவு காரணமாக போப் ஆண்டவரின் திட்டமிடப்பட்ட  பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக வாடிகன் சிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (87) முதுமை தொடர்பான உடல்நல பிரச்சினையால் சமீபகாலமாக அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் இந்தோனேசியா, பப்புவா நியூ கினி உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு 11 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

இதனையடுத்து பெல்ஜியம், லக்சம்பர்க் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் போப் பிரான்சிசுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுடனான சந்திப்பை அவர் ரத்து செய்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 

லேசான காய்ச்சல் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வரும் நாட்களில் பயணம் காரணமாகவும், இன்று(நேற்று) திட்டமிடப்பட்ட  பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து