முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரட்டாசி மாத கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      ஆன்மிகம்
Thiruthani 2024 07 28

Source: provided

திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மலைக்கோயிலில் குவிந்தனர். அவர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து 3 மணி நேரம் கழித்து சாமி தரிசனம் செய்தனர். 

முன்னதாக, கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தினர். தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடத்தினர்.

நேற்று  காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

அப்போது காவடி மண்டபத்தில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள்,  கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து