முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் சித்தராமையா ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை: டி.கே.சிவக்குமார் பதில்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      இந்தியா
TK-Sivakumar

பெங்களூரு, ஐகோர்ட் உத்தரவை அடுத்து முதல்வர் சித்தராமையா ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு இதற்கு முந்தின பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கடந்த மாதம் 19-ம் தேதி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதி நாகபிரசன்னா, மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சந்தேகத்திற்கு இடமின்றி விசாரணைக்கு உகந்தவை என்று குறிப்பிட்டார். இதனையடுத்து, சித்தராமையா மீது விசாரணை நடத்த கவர்னர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி சித்தராமையா தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சித்தராமையாவுக்கு எதிராக விசாரிக்க கவர்னர் அளித்த ஒப்புதலுக்கு தடை கோரிய வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் உள்ளனர். அவர் பதவி விலக வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, முதல்வர் ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை. பா.ஜ.க.வின் அரசியல் சதித்திட்டம் இது என கூறியுள்ளார். அவர் எந்தவித தவறும் செய்யவில்லை. எந்த ஊழலுடனும் அவருக்கு தொடர்பு இல்லை. நம் அனைவருக்கும் மற்றும் நாட்டின் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் எதிரான பா.ஜ.க.வின் அரசியல் சதித்திட்டம் இது என கூறியுள்ளார்.

நாங்கள் அவருக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருக்கிறோம். நாட்டுக்கும், கட்சிக்கும் மற்றும் மாநிலத்திற்கும் நல்லதொரு பணியை அவர் செய்து வருகிறார் என்றார். காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் எதிராக ஒரு பெரிய சதித்திட்டம் உள்ளது என கூறிய அவர், எனினும் நாட்டின் சட்ட நடைமுறையை எங்களுடைய கட்சி மதிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து