முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் குற்றவாளி உறுதி செய்தது நீதிமன்றம்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      உலகம்
Singapore 2024-03-24

சிங்கப்பூர், சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன், தம் பதவிக் காலத்தில் பரிசுப்பொருட்களை பெற்றதற்காகவும், நீதிக்கு இடையூறு செய்தமைக்காகவும், அவரை குற்றவாளி என்று கோர்ட் அறிவித்தது. அவருக்கு, 7 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன், அந்நாட்டு அரசில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார். அவர் பதவியில் இருந்த காலத்தில் கடுமையான ஊழல்களை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

இதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகினார். ஊழல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது. நேற்று அந்நாட்டு  ஐகோர்ட்டில் நீதிபதி வின்சென்ட் ஹூங் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.  

அப்போது, பதவிக் காலத்தில் பரிசுப் பொருட்களை பெற்றது, நீதிக்கு இடையூறு விளைவித்தது ஆகிய 5 குற்றச்சாட்டுகளில் ஈஸ்வரன் தவறை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் மீதிருந்த வேறு சில கடுமையான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. 

பரிசு பெற்றது, நீதிக்கு இடையூறு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், அவர் குற்றம் இழைத்திருப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கான சிறைத்தண்டனை அறிவிக்கப்படவில்லை. அதிகபட்சம் 7 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக சட்டத்துறை தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து