முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் சித்தராமையா வீட்டின் முன் போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் கைது

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2024      அரசியல்
BJP 2024-03-05

பெங்களூரு, முதல்வா் சித்தராமையாவின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார். தொடர்ந்து வழக்கின் விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா நேற்று உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நேற்று முன்தினம் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா வீட்டின் முன்பாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முயன்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பாஜகவினரை இழுத்துச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினரும் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் பெங்களூருவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசியல் சூழலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து