முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனப்பாக்கத்தில் தொழிற்பூங்கா: முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

ராணிப்பேட்டை : நெமிலியை அடுத்த பனப்பாக்கத்தில் அமைய உள்ள தொழில் பூங்காவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் 1213 ஏக்கர் பரப்பளவில் புதியதாக தொழில் பூங்கா அமைய உள்ளது. ரூ. 9000 கோடி மதிப்பீட்டில் முன்னணி நிறுவனம் டாடா நிறுவனத்தின் கார்கள் தயாரிக்கும் ஆலை, அதனைத் தொடர்ந்துரூ.400 கோடி மதிப்பீட்டில் காலணி தொழிற்சாலையும் அமைய உள்ளது. 

சிப்காட்டில் புதிதாக துவங்கப்பட உள்ள தொழில் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணி அளவில் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தொழிற்சாலை அமையும் இடங்களில் புதிய சாலைகள், மேம்பாலம் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் முதல்வர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. 

அமைச்சர் ஆர்‌.காந்தி தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக  பனப்பாக்கம் சிப்காட் பகுதியில்  விழா ஏற்பாடு பணிகளை  அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் கலெக்டர் சந்திரகலா ஆகியோர்  நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

முதல்வரின் வருகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு காரணமாக டிரோன்கள் மற்றும் ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார். 

நெமிலி அடுத்த பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் முதல்வர் வருகையொட்டி 2 டிஜிபிக்கள், 4 எஸ்பிக்கள், 17 ஏடிஎஸ்பிக்கள், 34 இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதற்காக தற்போது பாதுகாப்புக்காக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் நெமிலி அடுத்த பனப்பாக்கம் பகுதி முழுவதும் இன்று  நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி தோரணங்கள் கட்டி விழா கோலம் பூண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து