முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனைகளின்படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்து

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024      தமிழகம்
Senthil-Balaji 2023 03 27

Source: provided

சென்னை : சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனைகளின் படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி நேற்று காலை நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். 

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

இந்த வழக்கில்  செந்தில் பாலாஜிக்கு 58 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.  பின்னர்  சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. 

அதில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 471 நாட்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் இரவு ஜாமீனில் வெளியே வந்தார்.  

 இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி நேற்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து