முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கு அம்மை: கேரளத்தில் 2-வது நபருக்கு பாதிப்பு உறுதி

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024      இந்தியா
Monkey 2023-12-24

Source: provided

திருவனந்தபுரம் : கேரளத்தில் 2-வது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளம் திரும்பிய மலப்புரம் மாவட்டம் எடவன்னா பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபர் ஒருவருக்கு கடந்த 18-ம் தேதி குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதியானது. 

இதனைத் தொடர்ந்து, மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.  ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 26 வயது இளைஞர் ஒருவரின் மாதிரிகள், ஆலப்புழாவில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட நிலையில் தொற்று உறுதியாகியுள்ளது. தனியார் மருத்துவனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இரண்டாகவும், இந்தியாவில் மூன்றாகவும் உயர்ந்துள்ளது.  குரங்கு அம்மை பாதிப்பினால் ஏற்கெனவே கேரளத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  குரங்கு அம்மை பாதிப்பு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து