முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்து வரி மீண்டும் உயர்வு: சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024      தமிழகம்
Chennai 2023 04 25

Source: provided

சென்னை : சொத்து வரியை மீண்டும் உயர்த்த திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் (பொ) ஆர். லலிதா, நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் கடந்த 2022 ஆம் ஆண்டு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல் அதிகபட்சம் 150 சதவீதம் வரை சொத்து வரி உயா்த்தப்பட்டது.

மேலும், வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும் வரி உயா்த்தப்ட்டது. முன்னதாக, உயர்த்தப்பட்ட சொத்துவரி சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களைப் பொறுத்து வேறுபட்டது. 

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 6 சதவீதம் வரை சொத்து வரியினை உயர்த்தி, இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ஆம் தேதி சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நகர பஞ்சாயத்து இயக்குநர் சார்பில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு உத்தரவு பிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாமன்ற கூட்டத்தில், பொது இடத்தில் திடக்கழிவை எரித்தால் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.1,000 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த முடிவு செய்ப்பட்டது. சென்னையில் பொது இடத்தில் மரக்கழிவு கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.200 லிருந்து ரூ.2,000 ஆகவும், வியாபாரிகள் குப்பை தொட்டி வைக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதம் ரூ.100 லிருந்து 1,000 ஆகவும், மெரினா, அண்ணாநகரில் பொது இடத்தில் நிகழ்ச்சி நடத்திவிட்டு தூய்மைப்படுத்தாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் பொது இடத்தில் குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.1,000 ஆக உயர்த்த மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து