முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வந்தே பாரத் ரயில்களை வாங்க ஆர்வம் காட்டும் வெளிநாடுகள்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      இந்தியா
Vande-Bharat-train 2024-03-

Source: provided

புதுடெல்லி : வந்தே பாரத் ரயில்களை வாங்குவதில் கனடா, சிலி, மலேசியா ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

மத்திய அரசு பெரு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்களை இயக்க ஆர்வம் காட்டி வருகிறது. நாட்டிலேயே அதிவேகமாக பயணிக்கும் ரயில் என்ற பெருமை இதற்கு உண்டு. மற்ற ரயில்களை காட்டிலும் இதற்கு கட்டணம் அதிகம் என்றாலும், செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும் என்பதால், இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்திய மக்களிடம் மட்டுமல்லாமல் சிலி, கனடா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளும் இந்த ரயில் மீது ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது,

இது போன்ற ரயில்களை தயாரிக்க வெளிநாடுகளில் 160 முதல் 180 கோடி ரூபாய் வரை செலவாகும். ஆனால், இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் 120 முதல் 130 கோடி ரூபாய் தான் செலாவாகிறது.  வேகத்தை அதிகரிப்பதிலும் வந்தே பாரத் ரயில்கள் முன்னணியில் உள்ளது. 

புல்லட் ரயில் கிளம்பிய 54 நொடிகளில் தான் மணிக்கு 100 கி.மீ., வேகத்தை எட்டும். ஆனால், வந்தே பாரத் ரயில்கள் 52 வினாடிகளில் இந்த தூரத்தை எட்டுகிறது.  வடிவமைப்பிலும் வெளிநாட்டு ரயில்களை விட சிறப்பானதாகவும் உள்ளது. 

விமானங்களில் இருந்து வரும் சத்தத்தை விட வந்தே பாரத் ரயில்களில் இருந்து வரும் சத்தம் 100 மடங்கு குறைவு. எரிபொருள் நுகர்வும் குறைவு. இதற்காக இந்திய ரயில்வே கட்டமைப்பை அதிகரித்து வருவதுடன், ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து