முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுகிறது: அதிபரானால் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்வேன்: டிரம்ப்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      உலகம்
Trump 2024-02-17

வாஷிங்டன், கூகுள் தேடுதலில், தன்னை பற்றி மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுவதாகவும், அதிபராக பதவியேற்றால் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்வேன் என்றும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் கூறியுள்ளார்.

 இதனையடுத்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

கூகுள் இணையதளத்தில் என்னை பற்றி தேடினால், மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுகிறது. ஆனால், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் பற்றி நேர்மறையான விஷயங்கள் பற்றி மட்டுமே காட்டப்படுகிறது. இது சட்டவிரோதமான நடவடிக்கை. 

இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிடும் என நம்புகிறேன். இது நடக்காவிட்டால், அமெரிக்க சட்டப்படி நான் அதிபராக பதவியேற்ற பிறகு கூகுள் மீது வழக்கு தொடர்வேன். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.

ஆனால், இதனை மறுத்துள்ள கூகுள் நிறுவனம், தேடுதலில் கிடைக்கும் தகவலில் இருவரது பிரச்சார இணையதளங்களும் முதலிலேயே காட்டப்படுகிறது. எந்த வேட்பாளருக்கு ஆதரவாக முடிவுகள் காட்டும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து