முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்காட்லாந்து சிகரத்தில் இந்திய தேசியக்கொடியுடன் அண்ணாமலை

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      உலகம்
Annamalai 2024-03-28

Source: provided

ஓஸ்லோ : ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சாதனை படைத்துள்ளார். இதனை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறி உள்ளார்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்றிருக்கிறார். படிப்பை முடித்த பின்னர் வரும் டிசம்பர் மாதம் சென்னை திரும்புகிறார். இந் நிலையில், ஸ்காட்லாந்தில் உள்ள 1,345 மீட்டர் உயரம் கொண்ட பென் நெவிஸ் சிகரம் மீது தேசியக்கொடியுடன் அண்ணாமலை ஏறி உள்ளார். இந்த சாதனையை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக தமது டுவிட்டர் பக்கத்தில் போட்டோவுடன் அவர் பதிவிட்டு உள்ளார்.

அந்த பதிவில் அண்ணாமலை கூறி இருப்பதாவது,

ஸ்காட்லாந்தில் உள்ள பென் நெவிஸ் சிகரம் பிரிட்டனின் உயரமான சிகரம். இந்த சிகரத்தில் ஏற ஒரு வாய்ப்பு கிடைத்தது. சவாலை ஏற்றுக் கொண்டு உச்சியை அடைந்தேன்.  எனது இந்த சாதனையை நான் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன். 

அவரின் தொலைநோக்கு பார்வையான மிஷன் லைப் என்பது ஒரு நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்ட ஒரு பிரச்சாரம். இந்த பயணம் மிகவும் அறிவூட்டுவதாக இருந்தது. எங்கள் பயணம் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத, தூய்மையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியது.

இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையேயான நீடித்த நட்பின் அடையாளமான பென் நெவிஸ் சிகரத்தில் மூவர்ணக்கொடியுடன் ஏறியதில் பெருமை அடைகிறேன். இவ்வாறு தமது பதிவில் அண்ணாமலை கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து