முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூரில் டாடா மின்னணு உதிரிபாக தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      தமிழகம்
Tata-Electronics 2024-03-28

கிருஷ்ணகிரி, ஓசூரில் டாடா மின்னணு உதிரிபாக தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டாடா நிறுவனத்தின் மின்னணு உதிரிபாக தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள ரசாயன கிடங்கில் நேற்று அதிகாலை 6 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டதால் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து