முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்: கும்ப்ளே சாதனையை முறியடித்த அஸ்வின்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024      விளையாட்டு
Ashwin 1

Source: provided

கான்பூர் : டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார்.

இந்தியா முன்னிலை...

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல் நாள் ஆட்டம்... 

அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது.

ஆசியாவில் அதிக விக்கெட்... 

வங்காளதேசம் தரப்பில் ஷாண்டோ 31 ரன், ஷத்மான் இஸ்லாம் 21 ரன், ஜாகிர் ஹசன் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்களுடனும், மொமினுல் ஹக் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட், அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் அஸ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவின் (419 விக்கெட்) சாதனையை அஸ்வின் (420* விக்கெட்) முறியடித்துள்ளார். இந்தப்பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (612 விக்கெட்) முதல் இடத்தில் உள்ளார்.

ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்:

1) முத்தையா முரளிதரன் (இலங்கை) - 612 விக்கெட்.

2) ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 420* விக்கெட்.

3) அனில் கும்ப்ளே (இந்தியா) - 419 விக்கெட்.

4) ரங்கெனா ஹெராத் (இலங்கை) - 354 விக்கெட்.

5) ஹர்பஜன் சிங் (இந்தியா) - 300 விக்கெட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து