முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி பண்டிகை, சத் பூஜைக்கு நாடு முழுவதும் 5,975 சிறப்பு ரயில்கள் இயக்கம்: மத்திய ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024      இந்தியா
Ashwini-Vaishnav 1

புதுடெல்லி, தீபாவளி மற்றும் சத் பூஜை முன்னிட்டு இதுவரை 5,975 சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 31-ம் தேதியும், சத் பூஜை நவம்பர் முதல் வாரத்திலும் கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நகரப் பகுதிகளில் இருப்போர் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இந்த நிலையில், பண்டிகை காலத்தில் சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் வெளியிட்டுள்ளார்.

புதுதில்லியில் வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்து அஸ்வினி வைஸ்ணவ் பேசியதாவது: “பண்டிகை காலத்தை முன்னிட்டு 108 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மற்றும் சத் பண்டிகைக்காக 12,500 பெட்டிகள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2024-2025 நிதியாண்டில் மட்டும் இதுவரை 5,975 சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் தீபாவளி பண்டிகை காலத்தில் ஒரு கோடி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும். கடந்த 2023- 2024ஆம் ஆண்டில் பண்டிகை காலங்களில் மொத்தம் 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 24ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் கவாச் 4.0 திட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், நாட்டில் முதல்முறையாக சவாய் மாதோபூரில் கவாச் 4.0 திட்டத்தை தொடக்கி வைத்தார். மேலும், வரும் ஆண்டுகளில் 10 ஆயிரம் இன்ஜின்கள் மற்றும் 9 ஆயிரம் கிலோமீட்டர் கவாச் 4.0 திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து