முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்: மாலத்தீவு அதிபர் முய்சு தகவல்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      உலகம்
Maldives 2023-10-01

மாலே, இந்தியாவுடன் மாலத்தீவு மிகவும் வலுவான இரு தரப்பு உறவை கொண்டுள்ளது என்றும், விரைவில் இந்தியாவுக்கு செல்ல திட்டுமிட்டுள்ளேன் என்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். 

 மாலத்தீவில் இந்திய எதிர்ப்பு பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியவர் முகமது முய்சு. சீனாவுடன் நட்புறவு பாராட்டிய அவர், இந்திய விரோத செயல்பாடுகளை அதிகப்படுத்தினார். 

மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் அங்கு முகாமிட்டிருந்த இந்திய ராணுவத்தினரை வெளியேற்றினார். அவரது செயல்பாடுகளாலும், இந்தியாவுக்கு எதிரான அமைச்சர்களின் வெறுப்பு பிரச்சாரத்தாலும், அங்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சரிந்தது.

அன்றாட வருவாய்க்கு இந்திய சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி இருந்த மாலத்தீவுகள், இதனால் பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சமீபத்தில் இந்தியாவின் உதவியை மாலத்தீவு நாடியது. 

இதனை ஏற்றுக் கொண்ட இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் வழங்கப்படும் 50 மில்லியன் டாலர் நிதியுதவியை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்தது. இந்த நிலையில் தான் மாலத்தீவு அதிபர் முகமது இந்தியாவின் உறவை வலுப்படுத்த ஆர்வம் காட்டி வருகிறார். 

இந்த நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவுடன் மாலத்தீவு மிகவும் வலுவான இருதரப்பு உறவை கொண்டுள்ளது. விரைவில் இந்தியாவுக்கு செல்ல திட்டுமிட்டுள்ளேன். 

மாலத்தீவுக்கு இந்தியாவுடன் எந்த பிரச்னையும் இல்லை. மாலத்தீவு மக்கள் வெளிநாட்டு ராணுவத்தினர் முகாமிட்டு இருப்பதை விரும்பவில்லை. இதனால் தான் இந்திய ராணுவத்தினரை நாட்டில் இருந்து வெளியேற்றினோம். இதனால் நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று அர்த்தம் இல்லை என்று தெரிவித்தார். 

 இந்த நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு  அக்டோபர் 6-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அவர், டெல்லியில் அக்டோபர் 7-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என அரசியல் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து