முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மையான தலைவர் யார்? மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி புது விளக்கம்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      உலகம்
Satya-Nathella 2024-03-28

 வாஷிங்டன்,  இன்றைய காலகட்டத்தில் உண்மையான தலைவர் யார் என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.,) புது விளக்கம் அளித்துள்ளார்.

 லிங்க்ட் இன் இணை நிறுவனர் ரெய்ட் ஹோப் மேனுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா கூறியதாவது: 

இன்றைய உலகிற்கு தலைவர்களிடம் இருந்து ஆற்றலும் உற்சாகமும் தான் தேவை. எதிலும் ஈடுபடுவது என்பது எளிது. ஆனால், தலைவர்களுக்கான உண்மையான அளவுகோல் என்பது, ஒரு சூழ்நிலை வரும் போது, தெளிவை கொண்டு வந்து உற்சாகத்தை ஏற்படுத்தி தீர்வு காண்பதுவே ஆகும். இந்த மூன்றும் இருந்தால், உலகம் சிறந்த இடமாக இருக்கும். 

 உலகில் 85 சதவீத நிர்வாகிகள், தங்களது ஊழியர்கள் கடினமாக உழைக்கவில்லை என கருதுகிறார்கள். ஆனால், 85 சதவீதம் தொழிலாளர்கள் கடினமாக உழைப்பதாகவும் எண்ணுகின்றனர். இதுதான் உண்மையான நிலவரம்.  

தலைவராக, நாம் என்ன மாதிரியான முடிவுகள் வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்பதை எப்படி தெளிவுபடுத்துவது குறித்து நாம் கற்றக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து