முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு விவகாரம்: மராட்டிய அரசு விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      இந்தியா
Election 2024-04-15

மும்பை, அதிகாரிகள் இடமாற்றம் குறித்த  உத்தரவை அமல்படுத்த தவறியது குறித்து விளக்கம் அளிக்க மராட்டிய அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

மராட்டிய சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தலுக்கு முன்பாக அதிகாரிகள் இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் உத்தரவை முழுமையாக அமல்படுத்த தவறியதற்காக மராட்டிய அரசின் தலைமை செயலாளர் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி.யை தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. 

மேலும் உரிய விளக்கம் அளிக்குமாறு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி நோட்டீசும் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 31-ம் தேதி அன்று பிறப்பித்த உத்தரவில், 3 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்த அதிகாரிகள் அல்லது ஒரே பதவியில் தொடர்பவர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மாநில அரசு நிர்வாகம் இதுவரை அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. 

மாநில நிர்வாகம் விதிமுறைகளுக்கு இணங்காதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற செயலற்ற தன்மையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. இது குறித்து மராட்டிய அரசின் தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.  இவ்வாறு தேர்தல் ஆணையம் கடிதத்தில் கூறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து