முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு : 650 பேர் எழுதினர்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      தமிழகம்
IAS-IPS 2024-03-28

Source: provided

சென்னை : சென்னையில்  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர். 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். மற்றும் ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 1056 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வை கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி நடத்தியது. 

இத்தேர்வில் இந்தியா முழுவதும் 14,627 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 650 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு கடந்த 20-ம் தேதி தொடங்கியது. 

மெயின் தேர்வு இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடந்தது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மட்டும் இத்தேர்வு நடந்தது. கடந்த 20-ம் தேதி அன்று கட்டுரை வடிவிலான தேர்வு நடந்தது.

தொடர்ந்து 21-ம் தேதி காலையில் இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வும் நடந்தது. 22-ம் தேதி காலையில் 4-ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5-ம் தாள் தேர்வு(பொது அறிவு4) தேர்வும் நடந்தது. 

சென்னையில் எழும்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பி.சி.கே.ஜி. அரசு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை சுமார் 650 பேர் எழுதினர். 

இந்நிலையில் நேற்று  மீண்டும் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நடைபெற்றது. நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இந்திய மொழிகளில் ஒரு தாள் தேர்வும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஆங்கிலம் தேர்வும் நடைபெற்றது. 

கடைசி நாளான இன்று காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுகிறது. தேர்வு மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு உபரகரணங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெறும் மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து